Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டரீதியான மதுபான விற்பனையில் முறையே யாழ்ப்பாணம், நுவரெலியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் முதன்நிலையில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “போதைப் பொருளிலிருந்து விடுதலைபெற்ற நாடு” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாவது கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “மதுபான விற்பனையில் யாழ்ப்பாணம் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றது. நுவரெலியா இரண்டாவது இடத்திலும், மட்டக்களப்பு மூன்றாவது இடத்திலுமிருக்கின்றது. நுவரெலியாவில் ஆண்கள் மாத்திரமின்றி பெண்களும் மது, போதைப் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

போதைப் பொருளிலிருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்தில் எச்சரிக்கையைப் பார்க்கிலும் முன்மாதிரியே மேலானது. இதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தமது மனச்சாட்சிக்கு ஏற்ப எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மது விற்பனையில் யாழ்ப்பாணம், நுவரெலியா, மட்டக்களப்பு முன்னிலை: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com