தேமுதிக - தமாகாவுடன் நேசம் தொடரும் என்று, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, மதிமுகவும், தேமுதிகவும் தொகுதி உடன்பாடு என்கிற அடிப்படையில்தான் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தனர். எனவே, அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது அவர்களது உரிமை. ஆனால், நாங்கள் பாராட்டி வரும் நேசம் என்பது இருக் கட்சிகளுடனும் தொடரும் என்று கூறினார் வைகோ.
அதோடு மக்கள் நலக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலின் போது யாருடன் கூட்டணி சேர்வது என்பதை முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார். மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா ஆகிய இருக்கட்சிகளும் விலகி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதுக் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது இவ்வேளையில் குறிப்பிட்டது தக்கது.

0 Responses to தேமுதிக - தமாகாவுடன் நேசம் தொடரும்: வைகோ