வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு கிடையாது என்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
மேயர்களை உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் சட்டத் திருத்தத்தை இன்று சட்டப்பேரவையில் அமல்படுத்தினார் வேலுமணி. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேயர்களுக்கு உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றால், மேயர் சரியாக செயல்பட முடியவில்லை என்றும், எனவே, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களால் மேயர் தேர்ந்தெடுக்கப் படும்போது, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எனவே, மேயர் நன்றாக செயல்பட முடியும் என்று தெரிவித்தார் வேலுமணி, எனவே, மேயரை தேர்தெடுக்க உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் போதும் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆட்சியின் கடைசிக்கு கூட்டத் தொடரில் அறிவித்தத்தைப் போல உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை உடனடியாக அமல்படுத்த முடியாது என்பதால், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் முன்பிருந்த ஒதுக்கீட்டு முறையே கடைப்பிடிக்கப்படும் என்று வேலுமணி கூறினார்.

0 Responses to உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு கிடையாது: வேலுமணி