Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் தருணத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே இறுதி மோதல்களில் இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர் எனும் விடயம் முன்கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

ஆயினும், இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றும், மீட்கப்பட்ட குண்டுகள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கிலேயே கொத்துக் குண்டுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொத்துக் குண்டுகளை இராணுவத்தினர்தான் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை எந்த அடிப்படையில் உறுதிசெய்ய முடியும்? அதனை தமிழீழ விடுதலைப் புலிகளும் பயன்படுத்தியிருக்கலாம்தானே?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையின் இறுதி மோதல்களில் இராணுவத்தினரால் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக புகைப்படங்களுடன் பிரித்தானியாவின் ‘தி ஹார்டியன்’ பத்திரிகை கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இலங்கைக்கு ஐ.நா.வில் அழுத்தம் கொடுக்கும் நோக்கில் கொத்துக் குண்டு விவகாரம் கொண்டு வரப்பட்டுள்ளது: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com