Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறுவர் உழைப்பைச் சுரண்டி சிறுவர் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தொழிலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கேற்ப செயற்படும் ஒரு நாடு என்ற வகையில் சிறுவர்களைப் பாதுகாத்துப் போசிப்பதற்கு அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சிறுவர் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்கு சர்வதேச கடப்பாடுகளுக்கேற்ப செயற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சிறுவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு பொதுக்காரணமாக அமையும் வறுமையை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களில் இருந்து எமது பிள்ளைகைளைப் பாதுகாப்பதற்கு சட்டதிட்டங்களை வகுக்கும் அதேநேரம் ஏற்கெனவேயுள்ள சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் சட்டத்தினால் மட்டும் அதனை நிறைவேற்ற முடியாது என்றும் குறிப்பிடட ஜனாதிபதி, சமூகத்தில பொறுப்புள்ள அனைவரும் அது தொடர்பாக மிகுந்த தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சிறுவர் உழைப்பைச் சுரண்டி மீறல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com