இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிக் கட்டமைப்பின் தலையீட்டுக்கோ, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புக்கோ இடமில்லை என்று அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையொன்றை முன்னெடுப்பதான அரசாங்கத்தின் முடிவில் எந்தவித மாற்றங்களும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் மேற்படிக் கருத்துக்களை முன்வைத்தனர்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு உள்வாங்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் சையிட் அல் ஹுசைன், இலங்கை தொர்பான தனது வாய்மூல அறிக்கையில் வலியுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டுக்கு இலங்கையில் அனுமதி இல்லை: அரசு திட்டவட்டம்!