Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தக்காளி விலை திடீரென்று கிடுகிடு என்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னைக்கு ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து தக்காளி கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்வது வழக்கம். ஆனால்,ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து கடந்த சில நாட்களாக வரத்து இல்லை என்று தெரிகிறது. அங்கு அசாதாரணமாக நிலவிய வறட்சியும்,வறட்சிக்குப் பின்னர் பெய்த மழையுமே தக்காளி விளைச்சல் குறைதத்தற்குக் காரணம் என்றும், இதனால் சென்னைக்கு தக்காளி வரத்து மிகவும் குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி விற்பனை நிலையத்துக்கு தினம் 250 லாரிகளில் தக்காளி வரும் என்றும், இப்போது வெறும் 170 லாரிகளில் மட்டுமே தக்காளி வரத்து உள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல், மார்ச் மாதங்களில் 25 ரூபாயில் இருந்து 35 ரூபாய் வரை ஒரு கிலோ விற்கப்பட்ட தக்காளி இன்று மொத்த விலை எனில் கிலோ 90 ரூபாய் என்றும், சில்லறை விலை என்றால் கிலோ 100 ரூபாய் என்றும் விற்கப்பட்டு வருகிறது.மேலும் விலை உயரும் என்கிற அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர்.

0 Responses to தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com