Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவின் பரபரப்பான ஷாங்காய் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப் பட்ட குண்டுத் தாக்குதலில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இத்தாக்குதலை நிகழ்த்திய நபர் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இத்தாக்குதலில் காயமுற்றவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இத்தாக்குதலின் பின்னணியில் தீவிரவாதமா அல்லது என்ன காரணம் என்று இதுவரை தெரிய வரவில்லை. சம்பவத்தின் பின்னர் விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை தீவிர சோதனை நடத்தினர். ஆபத்தான வெடிபொருட்கள் எதுவும் கண்டு பிடிக்கப் படாததால் விமான நிலையம் வழக்கம் போல் செயற்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தாக்குதல் ஏன் நடத்தப் பட்டது என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகின்றது.

0 Responses to சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com