Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக தனிப் பணியகம் அமைக்கும் சட்டமூலத்தினை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

காணாமற்போனோரை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அவர்களின் உறவினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவை இந்த சட்டமூலத்தில் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளும் இந்தப் பணியகம் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. காணாமற்போன நபர் உயிரோடு இருந்தால் அதனை அவரது உறவினர்களுக்கு அறிவிப்பதற்கு இந்தப் பணியகம் நடவடிக்கை எடுக்கும்.

காணாமற்போனோர் தொடர்பான புதைகுழிகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் இருந்தால் அதனைத் தோண்டும்படி உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றங்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அதிகாரமும் சட்டமூலத்தின் அடிப்படையில் இந்தப் பணியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியகத்தில் தலைமையகம் கொழும்பில் அமைக்கப்பட உள்ளது. பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்கும் இந்த சட்ட மூலத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆளும் கட்சி கொறடாவும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல, இந்த சட்டமூலத்தை மேலும் ஆராய்வதற்கு சட்டமூலங்கள் தொடர்பாக ஆராயும் பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அது விரைவில் பாராளுமன்றத்தில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளபடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to காணாமற்போனோர் தொடர்பில் தனிப் பணியகம் அமைக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com