பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பதிலாக, பலம்வாய்ந்த விரிவுபடுத்தப்பட்ட விசாரணை பிரிவொன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினை அரசாங்கம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே, ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரிக்க விசேட நிதிப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படுமென அறிவித்திருந்தோம். அதன்படியே நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவை ஆரம்பித்தோம். ஆனால் அந்தப் பிரிவு தொடர்ந்து இயங்க முடியாது. எனவே அதனைவிட விரிவுபட்ட ஒரு பாரிய நிறுவனத்தை பாராளுமன்ற சட்டமூலத்தினூடாக கொண்டுவருவோம். அதுவரை நிதிப்புலனாய்வு பிரிவு அமுலில் இருக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பதிலாக விரைவில் பலம்வாய்ந்த விசாரணைப் பிரிவு அறிமுகம்: ராஜித சேனாரத்ன