Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான என்.ஆர்.ஓ இன் மூலம் திங்கள் இரவு 1.51 இற்கு 3 அடுக்கு ராக்கெட்டு மூலம் விண்ணில் செலுத்தப் பட்ட உளவு செய்மதி கிளம்பிய சில நிமிடங்களிலேயே விண்ணில் வெடித்துச் சிதறி கடலில் விழுந்துள்ளது. டெல்டா 4 என்று பெயரிடப் பட்ட குறித்த ராக்கெட்டு அமெரிக்கா இதுவரை விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டுக்களிலேயே பெரியது ஆகும்.

இந்த உளவு செய்மதி ஃபுளோரிடா மாநிலத்தின் கேப் கெனவரல் என்ற இடத்தில் இருந்து ஏவப் பட்டிருந்தது. அண்மைக் காலமாக அடுத்தடுத்து ஏற்பட்டு வந்த ராக்கெட்டு விபத்துக்கள் அமெரிக்காவின் விண்வெளித் துறைக்கு சற்று பின்னடைவையே ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தான் பூமிக்கு மேலே உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS விண்வெளி வீரர்களை அனுப்ப ரஷ்யாவின் சோயுஷ் விண் ஓடத்தை நாசா பயன்படுத்தி வருகின்ற்து குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க உளவு செயற்கைக் கோளுடன் பறந்த ராக்கெட்டு விண்ணில் வெடித்துச் சிதறியது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com