Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான சோமவன்ச அமரசிங்க தான் மறைவதற்கு சில காலத்திற்கு முன்னர், ‘தான் இல்லாத காலம்’ தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சோமவன்ச அமரசிங்க தன்னுடைய 74வது வயதில் நேற்று புதன்கிழமை காலை இராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு, 'சோமவன்ச அமரசிங்க என்பவர், எப்போதாவது இந்த உலகை விட்டுச் செல்லக்கூடியவர். அது கட்டாயம் நடக்கும்.

அரசியலில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரியானதை மக்களுக்காகச் செய்யாத மக்கள் விடுதலை முன்னணி, அழிவுக்கு உள்ளாகும். என் வாழ்க்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மக்கள் விடுதலை முன்னணிக்கு நான் எந்தவிதத் தீங்கினையும் ஏற்படுத்தவில்லை.

என்னுடைய நண்பருக்கோ அல்லது இந்த நாட்டின் எந்தவொரு பிரஜைக்குமோ, நான் கெடுதல் நினைத்ததில்லை. மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்காலத்தையும், அக்கட்சி விடும் தவறுகளை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கும் நோக்கிலுமே, அந்தக் கட்சியை விட்டு நான் விலகினேன். கட்சியைக் காப்பாற்றவே, அக்கட்சியை விட்டு விலகும் தீர்மானத்துக்கு வந்தேன். சோமவன்ச அமரசிங்க என்றொருவர் இருந்தார். அவர், கட்சிக்காகக் குறிப்பிட்டதொரு வேலையைச் செய்தார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தற்போது இந்நாட்டு அரசியல், மிகவும் கீழ் தரத்துக்குச் சென்றுள்ளது. மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சேவையாற்றக்கூடிய அரசியலொன்றின் தேவை, தற்போது வலுத்துள்ளது. கடந்த 67 வருடங்களாக, இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச்சென்ற பிரதான கட்சிகள், தற்போது மேடைகளில் நிர்வாண ஆட்டங்களை ஆடத் தொடங்கியுள்ள காலமே இது. இவ்வகையான அரசியல் செயற்பாடுகளை நிறுத்த, பொதுமக்கள் விழிப்புடன் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

நான் எப்போதும், மக்களுக்காகவே முன்னின்றவன் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்வேன். எது எவ்வாறாயினும், என்னைப் பற்றியோ, மக்கள் விடுதலை முன்னணியைப் பற்றியோ, விமல் வீரவன்ச என்ற அரசியல்வாதி வெளியிட்ட கருத்துக்கள், மக்களை வெறுமனே ஏமாற்றுவது மாத்திரமே. அவருடைய அரசியல் எண்ணக்கருக்களும் என்னுடைய அரசியல் எண்ணக்கருக்களும், வானமும் பூமியும் போன்றது. ஒருபோது அவை பொருந்தாது.” என்றுள்ளார்.

0 Responses to ஜே.வி.பி அழிவடையும்; பிரதான கட்சிகள் நிர்வாண ஆட்டம்; விமல் வீரவங்ச பொய்யர்: சோமவன்ச அமரசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com