அரிசி, கோதுமை மா உள்ளிட்ட பத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அண்மையில் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரியினை (VAT) அடுத்து அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களினதும், சேவைகளினதும் விலை அதிகரித்தது. இதனையடுத்து, மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல்களை அடுத்து பத்து அத்தியாவசியப் பொருட்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், அரிசி, எரிவாயு, சீமெந்து, கடலை, கோழி இறைச்சி, ரின் மீன், பால் மா, கோதுமை மா, வெள்ளைச் சீனி, செத்தல் மிளகாய், நெத்தலி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விடயங்களைக் கையாள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

0 Responses to அரிசி, கோதுமை உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு முடிவு!