நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்த இராணுவத்தினரை பலிபீடம் ஏற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இராணுவத்தைத் தண்டிப்பதாயின் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நிறைவடைந்தபோது நாட்டில் காணப்பட்ட சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்க முடியும். மாறாக, விசேட நீதிமன்றங்களினூடு உருவாக்கப்படும் சட்டங்களினால் தண்டிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, "நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்து எமக்கு சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்திக்கொடுத்த இராணுவத்தினர் இன்று பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் ஓர் இணக்கப்பாட்டுடன்தான் கொண்டுவரப்பட்டது. இதில் மூன்று தரப்புகள் அதாவது இலங்கை அரசாங்கம், அமெரிக்கா, மனித உரிமைகள் பேரவை ஆகியன உள்ளடங்குகின்றன. இது ஒரு முத்தரப்பு உடன்படிக்கையாகும்.
இலங்கை தொடர்பில் வாக்குறுதிகளை சர்வதேசத்திற்கு கொடுத்தது யார் என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஐக்கிய நாடுகள் தீர்மானம் தொடர்பில் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளது.
இணக்கப்பாடு இல்லாமல் எவ்வாறு இவ்வாறான வாக்குறுதிகளை வழங்க முடியும்? அத்துடன், இவ்வாறான தீர்மான்தைக் கொண்டுவர யார் அதிகாரத்தை வழங்கியது? இது இலங்கையின் யோசனைதான். அமெரிக்காவின் யோசனை அல்ல. ஒவ்வொரு தனிநபர்களுக்கும் எதிராக வழக்குத் தொடர முடியுமென யோசனையில் கூறப்பட்டுள்ளது.
இராணுவத்தினரைத் தண்டிக்கப் பாரிய சதித்திட்டமொன்று தீட்டப்படுகின்றது. கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் விசாரணை நடத்துவதை கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்கிறார். அத்துடன், கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார். இது முற்றிலும் பொய்யான விடயமாகும். கொத்துக்குண்டுகள் பாவிக்கப்பட்டமைக்கு சாட்சி உள்ளது என்று அவர் கூறுகின்றார். இது அரசியல் நாடகமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்தினரை பலிபீடம் ஏற்ற அரசாங்கம் முயற்சி: ஜீ.எல்.பீரிஸ்