மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கொலையாளி என்று கூறப்படும் ராம்குமாருக்கு ஆதரவாக வாதாட ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.
இளம்பெண் சுவாதி, கடந்த 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தது திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் என்று போலீசார் அவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில், இவருக்கு ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தொடுத்திருந்தார். அந்த மனுவை நேற்று விசாரணைக்கு நீதிபதிகள் எடுத்துக்கொண்டபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் தமது கருத்துக்களை எடுத்து வைத்தார்.
அதாவது கொலையாளி என்று சொல்லப்படும் ராம்குமார் இதுவரை இந்த கொலைக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றோ, அல்லது இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்றோ தாம் ஒரு அப்பாவி என்றோ இதுவரை சொல்லவில்லை. அவரை இதுவரை வழக்கறிஞர்கள் ஒருவரும் நேரில் சந்திக்கவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, ராம்குமாரை கிருஷ்ணமூர்த்தி சந்திக்காமல் அவரின் சம்மதம் பெறாமல் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளதும், தாம் கொலையாளி இல்லை என்று வழக்கறிஞர் ராம்குமார் கூறியது போல ஜாமீன் கேட்டு மனுத தாக்கல் செய்துள்ளதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதே போன்று ராம்குமாரிடம் வக்காலத்தும் பெறாமல் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், இன்று இவ்வழக்கிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.

0 Responses to சுவாதி கொலைக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர் கிர்துஷ்ணமூர்த்தி விலகல்!