Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர்வதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளவர்களுள் 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது.

இதற்காக சுமார் 25 கோடி ரூபாய்களை இராணுவம் ஒதுக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு வீடும் சுமார் 25 இலட்ச ரூபாய் பொறுமதியுள்ளதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று திங்கட்கிழமை மாவிட்டபுரத்தில் இடம்பெற்றது. இதில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகேஷ் சேனநாயக்க, மேலதிக அரச அதிபர் பா.செந்தில்நந்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Responses to வலிகாமம் வடக்கில் மீளக்குடியேறவுள்ள 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க இராணுவம் முடிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com