Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குழப்பங்கள் இருக்குமாயின், அதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஐக்கிய நாடுகள் தீர்மானத்தில் பிரேரிக்கப்பட்ட விடயங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லை என்றும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டதாக, சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ள கருத்திற்கு மறுப்புத் தெரிவித்த இரா.சம்பந்தன், “ஐக்கிய நாடுகளினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அத்தோடு, ஜனாதிபதியின் கருத்தானது, தனது ஆட்சியின் கீழ் ஏற்படக்கூடிய அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான தந்திரோபமாயமாக இருக்குமாக இருந்தால், அதனைச் சரியான முறையில் சரியானவர்களுடன் கலந்துரையாடி சரிசெய்துகொள்ளவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com