Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய மீனவர்கள் எந்தவொரு காரணம் கொண்டும் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியாது. அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்காது என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருடமொன்றில் 75 நாட்களுக்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, “75 நாட்களுக்கு அல்ல 75 செக்கன்களுக்கு கூட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை. அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகளோ மீன்படி வலைகளோ விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.” என்றுள்ளார்.

0 Responses to இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் 75 செக்கன்கள் கூட மீன்பிடிக்க முடியாது: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com