ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சிக்கு புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட இருப்பதோடு, கட்சியின் நிலைப்பாட்டினை மீறிச் செயற்படுபோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கட்சியை பலப்படுத்துவது தொடர்பில் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளர்களின் பங்களிப்புடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. கட்சி நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்தும் புதிய குழுக்களை இணைத்து உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முகம்கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.” என்றுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்: லக்ஷ்மன் யாப்பா