Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்துவிட்டு அதனை எம்மீது திணிக்க முயலாதீர்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன் எங்களுடன் பேசுங்கள்.” என்று மத்திய அரசாங்கத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா சிதம்பரபுரம் குடியேற்ற கிராம மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் வைபவமும், தற்காலிக வீட்டுத் திட்டம் வழங்கும் வைபவமும் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் கௌரவ பிரதம மந்திரிக்கும் நாம் மேலும் மேலும் கூறி வருவது வடக்கு மாகாண வேலைத் திட்டங்கள், செயற்றிட்டங்கள், கொள்கைகள் பற்றி நடவடிக்கைகள் எடுக்கும் போது இறுதித் தீர்மானங்கள் எடுக்க முன்னர் எங்களுடன் அதாவது வடக்கு மாகாண சபையுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுங்கள்.

தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்க விழையாதீர்கள். ஏன் பிரதம செயலாளருக்குத் தெரியப்படுத்தினோமே என்று கூறுவீர்கள். பிரதம செயலாளர் தொழிற்திறனுடனும், நிர்வாகத் திறனுடனும் நடக்கும் மத்தியால் நியமிக்கப்பட்ட ஒரு அலுவலர். அரசியல் ரீதியாக விடயங்களை ஆராய்வதென்றால் அவற்றை மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். பல செயற்றிட்டங்களின் தூரநோக்குப் பாதிப்புக்களை எம்மக்கள் பிரதிநிதிகளே அடையாளங் காணக்கூடியவர்கள்.

சில அரச அலுவலர்களின் தன்னிச்சையான தன்னலம் கருதிய நடவடிக்கைகள் எமக்கு வருத்தத்தைத் தருகின்றது. எம்மக்களை உதாசீனஞ் செய்து மாற்றாருக்கு மனமகிழ்வை ஊட்டப் பாடுபடும் அவர்களின் மனோநிலை மாற வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுக்காதீர்கள்: மத்திய அரசாங்கத்துக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com