Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவோ, அல்லது பயன்படுத்துவது சரியென்றோ தான் கூறவில்லை என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

ஆயினும், 2009ஆம் ஆண்டில் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடைகள் ஏதும் விதிக்கப்பட்டிருக்கவில்லை என்றே தான் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் இறுதி மோதல்களில் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2009ஆம் ஆண்டில் இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் தவறில்லை என்கிற கருத்தினை மக்ஸ்வெல் பரணகம அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, “கொத்துக் குண்டுகளை இராணுவம் பயன்படுத்தவில்லை. அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். கொத்துக் குண்டுகள் தொடர்பில் மக்ஸ்வெல் பரணகம பண்டிதத்தனமான கருத்துக்களை வெளியிடுகின்றார்.” என்று தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இராணுவம் கொத்துக் குண்டுகளை பாவித்ததாக கூறவில்லை; மங்களவின் கருத்துக்கு பரணகம பதில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com