Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளோ, தலையீடுகளோ உள்வாங்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த விசாரணைகள் அனைத்தும் உள்ள+ர் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெறும். வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்குவதற்கு, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் இடமளிக்கவில்லை. இந்த விசாரணைகள் அனைத்துலக கவனத்தைப் பெற்றிருக்கும் நிலையில் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும்.

இதனால், வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையை இந்த விசாரணைகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஜனாதிபதியும், பிரதமரும், கருதுகின்றனர். இந்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கு, முன்னைய அரசாங்கம் கூட முடிவு செய்திருந்தது. அதேவேளை, போரின் போது படையினர் ஒருபோதும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை.

இராணுவத்தின் அனுமதி மற்றும் கோரிக்கையின் பேரில் மட்டும் தான், விமானப்படை இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்தும். ஆனால், இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துமாறு விமானப்படையிடம் கோரிக்கை விடுக்கவில்லை. அதைவிட, கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு சில சிறப்பான வசதிகள் தேவைப்படும். விமானப்படையிடம் அத்தகைய வசதிகள் இல்லை.” என்றுள்ளார்.

0 Responses to இறுதி மோதல்களில் இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை: சரத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com