Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நேற்று வெளிக்கிழமை (ஜூலை 15, 2016) நிறைவுக்கு வந்தது.

குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலத்தினை நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், அதனால், நேற்றோடு தமது பணிகளை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து சுமார் 19,000 முறைப்பாடுகளை குறித்த ஆணைக்குழு பதிவு செய்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com