இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான விசாரணைப் பொறிமுறைகளில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பாக, பிரித்தானிய பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஹியூகோ ஸ்வயர் கூறியுள்ளதாவது, “பொறுப்புக் கூறல் பொறிமுறை நம்பகமானது என்பதை இலங்கையில் உள்ள சமூகங்கள் மத்தியில் உறுதிப்படுத்துவதற்கு சர்வதேசப் பங்களிப்பு அவசியம். இதனை நாம் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மூலமாகவும் வலியுறுத்தி வருகிறோம்.
இந்தச் செய்தி மதிக்கப்படும் என்று நம்புகிறோம். பிரித்தானிய அரசாங்கம் எப்போதுமே, பொறுப்புக் கூறல் பொறிமுறை நம்பகமானதாக, சர்வதேசத் தரம்வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதை வரவேற்றும் அதேவேளை, இந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வருகிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கை விசாரணைப் பொறிமுறைகளில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம்; பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தல்!