வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மையத்தினை ஓமந்தையில் அமைப்பதற்கு கிட்டத்தட்ட தீர்மானிக்கப்பட்டு விட்டது. இதற்கான உறுதிப்பாட்டினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சரின் முடிவுக்கு இணங்கியுள்ளார்.
பொருளாதார மையத்தினை அமைப்பதற்கு உகந்ததாக கூறப்படும் ஓமந்தையில் காணப்படும் இரு இடங்களையும், தாண்டிக்குளத்திலுள்ள இடத்தையும் நேற்று முன்தினம் சனிக்கிழமை வவுனியாவுக்குச் சென்ற மாவை சேனாதிராஜா நேரில் பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது ஓமந்தையில் ஏற்கனவே அடையாளமிடப்பட்ட காணியில் பொருளாதார மையத்தினை அமைக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்ததையடுத்தே, மேற்கண்ட பொறுப்பு அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 Responses to பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க இறுதி முடிவு - விக்னேஸ்வரனின் தீர்மானத்திற்கு மாவை இணக்கம்!