புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டின் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் போது, தமிழ் மக்களின் ஆணைக்கு எதிரான எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்?“ எனும் கலந்துரையாடல் நிகழ்வு மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு சிவில் சமூக பிரதிநிதிகளினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் வடக்கு- கிழக்கு இணைந்திருக்க வேண்டும். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும். எமது மக்களின் இறைமை பாதுகாக்கப்பட்டு அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று விரும்புகின்றோம். சர்வதேச ரீதியில் பல்வேறு வகையிலான சமஷ்டி முறைமைகள் காணப்படுகின்றன. தற்போது புதிய வடிவிலான ஒற்றையாட்சி- சமஷ்டி முன்வைக்கப்படுகின்றது. இனமுரண்பாடுகளுக்கான தீர்வு காணப்படும் போது, அந்தத் தீர்மானத்தைக் கொண்டு மக்களிடம் வருவோம். மக்களின் ஆணைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்காவிட்டால் அந்தத் தீர்வுக்கு ஒத்துழைக்க மாட்டோம்.“ என்று இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் ஆணைக்கு எதிரான எந்தத் தீர்வையும் ஏற்கோம்: சம்பந்தன்