முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக அழைக்கப்பட்ட பஷில் ராஜபக்ஷ, திவிநெகும திணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபு பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால், இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான நிதியை சட்டத்துக்கு முரணான வகையில் கையாண்டார் என்கிற குற்றச்சாட்டிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

0 Responses to பஷில் மீண்டும் கைது; நாமல் பிணை!