Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியவற்றின் அதிகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை அரச வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவகம் தெரிவித்துள்ளது.

11 சதவீதமாக இருந்து வந்த பெறுமதி சேர் வரி அண்மையில், 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில், பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியவை தொடர்பான திருத்த யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை, அதனை அமுல்படுத்தப்படுவதற்கு உயர்நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

எனினும், இந்தத் தடை அரச வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரித் திருத்தம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மீதான முதலாம் வாசிப்பு கடந்த 08ஆம் திகதி இடம்பெற்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வரித் திருத்த யோசனை மீதான இரண்டாம் வாசிப்பை எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த யோசனை இம்மாத இறுதிக்குள் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மே மாதம் 02ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரித் திருத்த யோசனை அமுல்படுத்தப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to வரி அதிகரிப்புக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு அரச வருமானத்தைப் பாதிக்காது: பிரதமர் அலுவலகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com