Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் போது விகாரகைளையும் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

“வடக்கு மாகாணத்திலிருந்து 2018ஆம் ஆண்டுக்குள் இராணுவம் வெளியேறிவிடும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர், குறிப்பிட்டது போன்று இராணுவம் வெளியேறும் போது, அவர்கள் அமைத்துள்ள பௌத்த விகாரைகளையும் கொண்டு செல்ல வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

துரைராசா ரவிகரன் மேலும் கூறியுள்ளதாவது, “முல்லைத்தீவு மாவட்டமானது, பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர் காலத்துக்கு முன்பு எந்தவோர் இடத்திலும் சிங்கள, பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது, இராணுவத்தினரால் 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இது இன்னமும் அதிகரிக்கலாம்.

நல்லிணக்கம் என்று சத்தமாகக் கூவிக்கொண்டு, மதத்திணிப்புகள் செய்வது பொருத்தமற்றது. கொக்கிளாயில் பௌத்தர்கள் இல்லை. ஆனால், அங்கு ஸ்ரீசம்போதி மகா விகாரை, தனியார் காணியில் முளைத்துள்ளது. நாயாறு நீராவி ஏற்றத்தில், பிள்ளையாரைத் தூக்கிவிட்டு விகாரையுடன் புத்தரை அமர்த்தியுள்ளனர். மாங்குளத்தில் விகாரை, மண்ணாகண்டலில் விகாரை. ஏன், தனிச் சைவக் கிராமம் வட்டுவாகலில் விகாரை, ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத் திணைக்களக் காணியில் விகாரை என, விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படியாக எம்மவர்களின் காணிகளில் அடாவடித்தனமாக விகாரைகளை அமைத்துக்கொண்டு, நல்லிணக்கம் பேசுகிறார்கள். 2018ஆம் ஆண்டில் வடக்கில் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கின்றார். இன நல்லிணக்கத்துக்கு அல்லது ஐக்கிய நாடுகளுக்கு பயந்து இது நடக்குமானால், விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும். தமிழ்ப் பகுதிகளில் விகாரைகள் இருக்க முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கிலிருந்து இராணுவம் விகாரைகளுடன் வெளியேற வேண்டும்: துரைராசா ரவிகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com