Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மென்பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த நபர் நேற்று நள்ளிரவு திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார்.

மென்பொறியாளர் சுவாதியைக் கொலை செய்தது, திருநெல்வேலி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்கிற நபர் என்பதை போலீசார் கண்டறிந்து அவரைக் கைது செய்துள்ளனர். போலீசார் நேற்று வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் நபர் சென்னை சூளைமேடு பகுதியில் இருக்கும் ஒரு மேன்ஷனில் 3 மாதங்களாகத் தங்கி வேலை தேடி வந்தவர் என்றும், இவர்தான் முகநூலில் அறிமுகமான சுவாதியை ஒரு தலையாகக் காதலித்தார் என்றும் கூறப்படுகிறது.

இவரை பின்தொடர்ந்தவரும் இவர்தான் என்று தெரிய வந்த நிலையில், ராம்குமார் தங்கி இருந்த மேன்ஷனில் அவர் தங்கியிருந்த விவரங்கள் வெளியாகின. ஆனால், கடந்த ஒரு வாரமாக அவர் மேனேஷனுக்கு வரவில்லை என்றும் தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரது சொந்த ஊர் திருநெல்வேலி என்று அறியப்பட்டு, திருநெல்வேலி போலீசாருடன் தொடர்புக்கொண்டு அவரைக் கைது செய்ய முற்படுகையில், அவர் பிளேடால் தமது கழுத்தை 5 சென்டிமீட்டர் அளவுக்கு கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை பாளையங்கோட்டை மருத்துவ மனையில் சேர்த்து தீவிர சிஓகிச்சை அளித்து வந்ததில், அவரது கழுத்தில் 5க்கும்மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு உள்ளன என்பதும் தெரிய வருகிறது.

அவ்ருக்கு தற்போது சுய நினைவு திரும்பிவிட்ட நிலையில், அவரை இன்னும் 3 மணி நேரத்துக்கு தொந்திரவு செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து கொலைக் குறித்த வாக்குமூலத்தை ராம்குமாரிடம் பெற மேஜிஸ்திரேட்டை மருத்வதுமனைக்கு அழைத்துச் சென்று ராம்குமாரிடம் வாக்குமூலம் பெறப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to சுவாதி கொலையாளி நேற்று நள்ளிரவு கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com