Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போருடன் தொடர்புடைய பொறுப்புக் கூறும் செயன்முறையில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வில், நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பிலான விடய உரையாடலின் போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய நெதர்லாந்து தூதுவர் ரொடெறிக் வான் ஸ்கிரேவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”நீண்ட செயன்முறையின் ஆரம்பக் கட்டத்திலேயே இலங்கை இன்னமும் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளில் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியவை அதிகம் உள்ளன.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி என்பனவற்றை உள்ளடக்கிய இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். நம்பகமானது என்பதை உறுதிப்படுத்துவதற்கு, பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேசப் பங்களிப்பு மிகவும் அவசியமானது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் நீக்க வேண்டும். சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் இயல்பு வாழ்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் அல்லது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாதுகாப்புப் படையினரின் பாலியல் மற்றும் பாலினத்தை அடிப்படையாக கொண்ட வன்முறைச் சம்பவங்களை தடுக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதில் இருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும், எஞ்சியுள்ள காணிகளையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இலங்கை தொடர்பாக கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to பொறுப்புக் கூறல் பொறிமுறையில் இலங்கை சர்வதேசப் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com