Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் நேற்றுமுன்தினம் இரவு விடுதியொன்றில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 20 பேரை நினைவு கூரும் முகமாக இரண்டுநாள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதக் குழுவொன்றினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், கொல்லப்பட்டவர்களில் 18 வெளிநாட்டவர்களும், இரண்டு பங்களாதேஷியர்களும் அடங்குகின்றனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 இலங்கையர் உள்ளிட்ட 13 பேரை பொலிஸார் மீட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில், 9 இத்தாலியங்களும், 7 ஜப்பானியர்களும், ஒரு அமெரிக்கரும், ஒரு இந்தியரும் அடங்குகின்றனர்.

0 Responses to பங்களாதேஷில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தேசிய துக்கம் அனுஷ்டிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com