Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய விமானப் போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்களால், இனி குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கலாம் என்று, அத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, புழக்கத்தில் இல்லாத மற்றும் புழக்கத்தில் உள்ள விமான நிலையங்களை சீர்ப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இணைப்பு விமானத்தின் சேவைகளையும் அதிகரிக்கும் விதத்தில் விமானக் கட்டணத்தையும் குறைத்து நிர்ணயிக்க விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அதன் படி 200 முதல் 800 கிலோ மீட்டர் வரையான விமான பயணங்களுக்கு 2 ஆயிரத்து 500 முதல் 5ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க விமானப் போக்குவடஹ்த்துத் துறை முடிவெடுத்துள்ளது. எனினும் 200 கிலோ மீட்டர் பயணத்துக்கான விமான கட்டண சேவையை ஆயிரத்து 270 ரூபாயாக நிர்ணயிக்கவும், அடுத்து 800 கிலோ மீட்டர் வரையான பயணத்துக்கும் இதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கலாமா என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். இதில் தனியார் விமான சேவைகளையும் பயன்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டு உள்ளது.

0 Responses to இனி குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com