Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அலுவலகங்கள் வடக்கு- கிழக்கு பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை வாழ் தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகளும், சர்வதேச சமூகமும் சிறந்த தீர்வு ஒன்றை வழங்கும் என தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.

இலங்கை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பல தடவைகள் அறிக்கைகள், தீர்மானங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டிலேயே தீர்மானமொன்றுக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது.

இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டு நீதவான்கள் வழக்குரைஞர்களின் பங்களிப்பு இன்றி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு கிடையாது.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகங்கள் வடக்கு- கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com