Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எனது நடை உடை,அந்தஸதை விமர்சனம் செய்ததால் சுவாதி மீது கோபம் வந்தது என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார் சுவாதியை வெட்டிப் படுகொலை செய்த ராம்குமார்.

ராம்குமார் சென்னை சூளை மேட்டில் தங்கி வேலைத் தேடிக்கொண்டு இருந்தபோது. சூர்ய குமார் என்கிற நபர் மூலமாகத்தான் சுவாதி அறிமுகம் ஆகி உள்ளார்.சூரியகுமாரிடம் சொல்லிவிட்டு, தமது காதலை சுவாதியிடம் சொல்லி உள்ளார் ராம்குமார். ஆனால், சுவாதி இதை ஏற்றுக்கொள்ளவில்லை.நான்காவது முறையும் தமது காதலை ராம்குமார் ஸ்வதியிடம் நண்பர் மூலமாகக் கூறியுள்ளார். அப்போதும் சுவாதி ராம்குமாரி காதலை ஏற்கவில்லை. மாறாக சூரிய குமாரையும் இனி தம்மிடம் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி சுவாதி எப்போதும் தமது நடை, உடை, பொருளாதார நிலைக்கு குறித்து மிகவும் கேவலமாக விமர்சித்து வந்ததாலும் மனம் குறுக்கிப் போயுள்ளார் ராம்குமார்.

இருப்பினும் சுவாதிக்காக தாம் மிகவும் கஷ்டப்பட்டு, நல்ல ஆடைகளை அணிய ஆரம்பித்ததாகவும் ராம் குமார் கூறியுள்ளார். 5 வவது முறையாக காதலை வெளிப்படுத்திய போதும், சுவாதி அவமானப் படுத்தவே அவரை ஏதாவது செய்ய வேண்டும் என்று ராம்குமார் முடிவெடுத்துள்ளார். பின்னர் சொந்த ஊருக்குச் சென்று அங்கிருந்து அரிவாளை எடுத்து வந்து, சுவாதியின் பின்புறமாக அவரைத் தாக்கிவிட்டுச் சென்றுவிட்டார். சுவாதியை கொல்ல வேண்டும் என்று தம் நினைக்கவில்லை, அவரைத் தாக்க வேண்டும் என்றும் மட்டுமே எண்ணியதாகவும், பின்னர் தமது அறைக்குச் சென்றபோதுதான், தொலைக்காட்சி செய்திகளில் சுவாதி இறந்துவிட்டது தெரிந்து சொந்த ஊருக்குச் சென்றதாகவும், அங்கு வழக்கம்போல் தாத்தாவுடன் ஆடு மேய்க்க சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் மாற்று உடை அணிந்த பெண் போலீசார் தம்மைப் பற்றி விசாரித்த நிலையில்தான் போலீசார் தம்மை நெருங்கி வந்துள்ளதை அறிந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் ராம்குமார் தெரிவித்துள்ளார். இவரை இன்று பிற்பகல் சென்னை அழைத்து வந்து, விசாரணை செய்வார்கள் என்றும் தகவல் தெரிய வருகிறது.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் ராம்குமார் இப்போது நலமுடன் உள்ளார் என்றும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிரபாதுகாப்பு வளையத்தினுள் இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் நெல்லை முதலாவது நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to எனது நடை உடை, அந்தஸதை விமர்சனம் செய்ததால் சுவாதி மீது கோபம் வந்தது: ராம்குமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com