ஐக்கியம் மற்றும் ஜனநாயகத்தை காப்பவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செவிமடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் செயற்பட்டது போல, தன்னால் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகார ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டதன் பிரதிபலனாக நான் ஜனாதிபதியானேன். நான், தீர்மானங்களை எடுப்பது அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்த்து, நாட்டின் தேவைக்கு ஏற்பவே ஆகும்.
அரசாங்கம் என்ற வகையில் ஒரு போதும் மக்கள் மீது சுமையை செலுத்த தயாரில்லை. பெறுமதி சேர் வரியினூடாக மக்களின் நாளாந்த வாழ்க்கையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முயல்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to ஐக்கியத்தைக் காப்பவர்களின் கருத்துகளை மதிப்பேன்: ஜனாதிபதி