Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியோகு அன்ரன் டெனிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பினை வழங்குமாறு பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தாக்குதலுக்குள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தியோகு அன்ரன் டெனியை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர். பிரியதர்சன மற்றும் சட்ட அதிகாரி வசந்தராஜ் உள்ளிட்டோர் மாவட்ட அலுவலக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டுள்ள மனித உரிமை அதிகாரிகள், சந்தியோகு அன்ரன் டெனியின் உடலில் ஏற்பட்டுள்ள சூட்டுக் காயங்களை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

அத்துடன், மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட அலுவலக அதிகாரிகள் சந்தியோகு அன்ரன் டெனி என்பவரின் குடும்பத்திற்கு பாதுக்காப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

சந்தியோகு அன்ரன் டெனி தொடர்பில் நேரடியாக தாம் பெற்ற வாக்குமூலம் மற்றும் அவரது உடலில் ஏற்பட்டுள்ள எரிகாயங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அதிகாரிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 Responses to கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான அன்ரன் டெனிக்கு பாதுகாப்பு வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுரை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com