Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையம் தொடர்பில் எழுந்துள்ள சர்சை தொடர்பில் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடி ஆராயவுள்ளனர்.

கொழும்பில் நடைபெறவுள்ள இன்றைய சந்திப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மையத்தினை வவுனியா மாவட்டத்தின் எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும் கோரி வருகின்றது.

இதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி மதவாச்சிக்கு நகர்த்திச் செல்வதற்கு மத்திய அரசாங்கம் முயல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவொன்றை எட்டுவதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

0 Responses to பொருளாதார மையம் தொடர்பில் கூட்டமைப்பு ஆராய்கிறது; சம்பந்தன் தலைமையில் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com