Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி, பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார். 1973ஆம் ஆண்டு இவர் இலங்கை மத்திய வங்கியில் இணைந்து நீண்ட காலம் பணியாற்றியருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வருட காலமாக மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூண மகேந்திரனின் பதவிக் காலம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமையும் முடிவடைந்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com