Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“எங்களை வருடக் கணக்கில் சிறையில் அடைத்தாலும், மக்களை வதைக்கும் அரசாங்கத்தை நாம் கவிழ்த்தே தீருவோம்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிறிஸ் நிறுவனத்தால் ரக்பி விளையாட்டுக்கு வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்யதார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி கைதுசெய்யபட்டு சிறை அடைக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர், நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "நீதித்துறையில் ஒரு சாதாரணத்துவம் கிடைத்துள்ளது என்று நினைக்கின்றேன். நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் செயற்பாடுகளைக் கண்டிக்கும் எங்களை சிறையில் அடைக்கின்றது.

பெறுமதி சேர் வரியை அதிகரித்து மக்களை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக அரசாங்கம் கூறியது. ஒரு வேலைவாய்ப்புக்கூட இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை.

மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்தவுடன் அதனை திசைதிருப்ப நாமலின் டொலர் 18 பில்லியன் டொலர் மற்றும் ரம்போ கினியை தேடுகின்றனர். ரக்பி விளையாட செலவு செய்த பணத்துக்காக சிறையில் அடைக்கின்றனர். சிறையில் ஒரு வாரம் இல்லை எத்தனை வருடங்கள் எங்களை அடைத்து வைத்தாலும் இந்த ஒடுக்குமுறையான அரசாங்கத்தை கவிழ்ப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to மக்களை வதைக்கும் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்; நாமல் ராஜபக்ஷ சூளுரை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com