Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டாலே, சிங்கள- பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்வதே இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முதற்படியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் உதவியில் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை- ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்நாட்டு பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட சகல கல்வி நிறுவனங்களும் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையங்களாக மாற்றமடைதல் வேண்டும். பாடசாலைகளின் பாடத்திட்டங்களில் நல்லிணக்கம் எனும் பாடம் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் இதனையிட்டு கவலையடைவதாகவும் அவ்வாறான மோதல்கள் ஏற்படாதவாறு எமது சகல கல்வி நிலையங்களையும் மீண்டும் சீர்செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டாலே சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ முடியும்: மைத்திரிபால

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com