முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைத் தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியின் விடுதலை கோரிக்கை மனுவை ஏற்க முடியாதது என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி. இவரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக பல வருடங்களுக்கு முன்னரே மாற்றப்பட்ட நிலையில் 1994ம் ஆண்டு +அரசாணைப்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கலாம் என்கிற நிலை உள்ளது. எனவே, இதன் அடிப்படையில் தம்மை முன்கூட்டியே நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று, தமிழக அரசிடம் மனு கொடுத்ததாகவும், இதுவரை அதற்கு பதில் இல்லை என்றும் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராஜீவ் கொலையாளிகள் என்று தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைத் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால்,நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், விடுதலை செய்யும் அதிகாரம் உள்ள தமிழக அரசு மேற்கண்டவாறு கூறி உள்ளதால், நீதிமன்றம் மனுவை ஏற்க முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். அதோடு, தமிழக அரசுக்கும் நளினியின் கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியும் உள்ளனர்.

0 Responses to ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் நளினியின் மனுவை ஏற்க முடியாது: நீதிமன்றம்