Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய சகோதரர்களை விட்டு விலகினால், அவரோடு இணைந்து செயற்படத் தயார் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரே படுபயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, அவரது மகன் நாமல் ராஜபக்ஷவோ குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

களனியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்தவுடன் இணைந்து செயற்படத் தயார்: மேர்வின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com