Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜேர்மனியின் தலைநகரம் பேர்லினில் நேற்றைய தினம் 5ஆவது தடவையாக தமிழீழ வெற்றிக்கிண்ணத்துக்கான மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளும் முதலாம் இடத்துக்கான வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டு, சுற்றுக்கிண்ணத்தை தட்டிச்சென்ற Lichterfelde தமிழர் விளையாட்டுக்கழகம் இம்முறை மூன்றாவது முறையாகவும் முதலாம் இடத்தை வகுத்து தமிழீழ வெற்றிக்கிணத்துக்கான சுற்றுக்கிண்ணத்தை தமதாக்கி கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும், இம் முறை ஆரம்பத்தில் இருந்து மிகவும் சிறப்பாக விணையாடிய தமிழர் விளையாட்டுக் கழகம் 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் முதலாம் இடத்தை தட்டிச் சென்று தமிழீழ வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டனர்.

பேர்லின் நகரில் பிரசித்தி பெற்ற Tempelhofer Feld மையத்தில் அமைந்திருக்கும் Berlin Braves Baseball Platz மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடைபாதையில் சென்ற நூற்றுக்கணக்கான பல்லின மக்களின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் வெற்றிபெற்ற கழகங்களுக்கும் சிறப்பாக துடுப்பாடிய வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

0 Responses to ஜேர்மனியில் இடம்பெற்ற தமிழீழ வெற்றிக்கிண்ணத்துக்கான மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com