Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இளம்பெண் மென் பொறியாளர் சுவாதியின் கொலைக் குறித்த குற்றப்பத்திரிகை இன்னும் 15 நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுவாதியின் கொலை வழக்கில் குற்றவாளி என்று கருதப்படும் ராம்குமாரின் விசாரணையுடன் இன்னும் 15 நாட்களில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது காவல்துறை. ராம்குமாருக்கு அதிக பட்ச தண்டனை வாங்கித் தரும் அளவுக்கு ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.சுவாதியின் நண்பர் பிலால், தந்தை மற்றும் கொலையை நேரில் பார்த்தவர் என 3 முக்கிய வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன. அதோடு எவ்வாறு சுவாதியை வெட்டினேன் என்று நடித்து காட்டியுள்ளார் ராம்குமார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது,சுவாதியை எவ்வாறு வெட்டினேன் என்பது குறித்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமார் நடித்துகாட்டியுள்ளார். ராம்குமாரிடம் போலீஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது, எங்கள் விசாரணையில் ராம்குமார் இருந்தபோது 13ம் தேதி நள்ளிரவில் ரயில் போக்குவரத்து இல்லாத சமயத்தில் நுங்கம்பாக்கம்  ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றோம்.

பயணிகள், பொதுமக்கள் இல்லாத நேரத்தில் எந்த ஊடகங்களுக்கும் தகவல் கசியாத வகையில் ராம்குமாரை அங்கு கொண்டு சென்றோம். பின்னர் கொலை செய்த விதத்தை நடித்து காட்ட சொன்னோம். கொலை நடந்த தினத்தன்று ராம்குமார் வந்த வழி,  சுவாதியை எங்கே எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தார், பின்னர் அவரை நெருங்கி  வெட்டிய விதம், வெட்டு விழுந்த விதம், எத்தனை முறை வெட்டினார், தப்பி ஓடிய விதம், எந்த வழியாக தப்பி ஓடினார். அரிவாளை தூக்கி எறிந்த இடம், மேன்ஷனுக்கு கடந்து சென்ற தெருக்கள் போன்றவற்றை நடித்துக் காட்டினார். நாங்கள் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளோம்.

ராம்குமார் ரயில் நிலையத்தில் இருந்து தப்பி செல்லும் காட்சிகள் 3 சிசிடிவி கமெராக்களில் பதிவாகி உள்ளது.ராம்குமாரும், வீடியோ காட்சியில் இருக்கும் நபரும் ஒருவர்தானா என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். முடிவு வந்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

0 Responses to சுவாதி கொலை வழக்கு: பதினைந்து நாட்களில் குற்றப்பத்திரிக்கை தயாராகும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com