யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதலை அடுத்து, இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை மீள ஆரம்பிக்கின்றன.
மருத்துவ பீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் ஆகிவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. கலைப்பீடம், சித்திரமும் வடிவமைப்பும், நடனம், இசைத்துறைகளின் பரீட்சைகள் திட்டமிடப்பட்டவாறு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் என பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பல்கலைக்கழக்தின் கல்வி நடவடிக்கைகள் முழு அளவில் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!