இராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் நேற்று சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பரவிபாஞ்சான் மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம், பரவிபாஞ்சான் செல்லும் வீதி முன்றலில் தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தில் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பமாகக் கலந்துகொண்டதோடு, தமக்கு ஒரு உறுதியான பதில் தரப்படாதுவிட்டால் இப்போராட்டம் இரவு பகலாக தொடரும் தெரிவித்தனர்.
2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையை அடுத்து இடம்பெயர்ந்த பரவிபாஞ்சான் மக்களின் காணிகளில், இராணுவம் முகாம்களை அமைத்துள்ளது. மோதல்கள் முடிவுற்று 7 ஆண்டுகள் நிறைவுற்ற போதிலும் மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே காணி உரிமையாளர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

0 Responses to இராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளைக் கோரி பரவிபாஞ்சான் மக்கள் போராட்டம்!