இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இருதரப்பு பேச்சுக்களின் 4வது கட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தங்களுடன் பேச வேண்டும் என்று வடக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய (தமிழக) மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் உள்ளிட்ட வடக்கு மீனவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்த விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, வடக்கு மீனவ கூட்டுறவுச் சங்க தலைவரும், இலங்கை மீனவப்பிரதிநிதிகள் குழுவின் அங்கத்துவருமான வி.பொன்னம்பலம், இலங்கை- இந்திய மீனவ நலன்புரி அமைப்பின் ஆலோசகரும், மீன்பிடித்துறை அமைச்சின் விசேட செயலணி குழு அங்கத்தவருமான எஸ்.பி.அந்தோனிமுத்துவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்குகொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்தோனிமுத்து, எதிர்வரும் புதன்கிழமைக்குள் உரிய பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இருதரப்பு பேச்சுக்களுக்கு முன் எங்களுடன் பேச வேண்டும்; ஜனாதிபதி, பிரதமரிடம் வடக்கு மீனவர்கள் கோரிக்கை!