Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்ததாக தன்னையும் சிறையில் அடைப்பார்களோ என்று சந்தேகமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தன்னுடைய மூத்த சகோதரருமான நாமல் ராஜபக்ஷவை தன்னுடைய இரண்டாவது சகோதரர் யோசித்த ராஜபக்ஷவுடன் சென்று நேற்று புதன்கிழமை ரோஹித்த ராஜபக்ஷ பார்வையிட்டார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, தொலைக்காட்சி நிறுவனமொன்றினை முறையற்ற ரீதியில் பணத்தினைப் பெற்று ஆரம்பித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்றில் யோசித்த ராஜபக்ஷ சில காலத்துக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டது போது, “நல்லாட்சி அரசாங்கம் சிங்கத்தின் வாலில் ஏறிவிட்டது. தற்போது அந்தச் சிங்கம் உங்களை துண்டு துண்டாக கிழித்தெறியாது என்று எதிர்பார்க்க வேண்டாம்.” என்று ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to என்னையும் சிறையில் அடைப்பார்களோ?; ரோஹித்த ராஜபக்ஷ அச்சம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com