சென்னை பட்டினப்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் மக்களுக்கு இக்காடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வழிப்பறி கொள்ளையர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பணம் எடுத்துச் சென்ற இளம்பெண்ணிடம் பணம் பறித்துக்கொண்டு தப்பி வாகனம் ஓட்டிச் சென்றார். இவரைத் துரத்தியபடி சென்ற இளம்பெண், கீழே தள்ளி விடப்பட்டதால் அவர் அடிப்பட்டு உடனடியாக உயிரிழந்தார்.
அது மட்டுமின்றி தப்பிச்ச சென்ற கொள்ளைகாரன் வாகனம் மோதி ஓய்வு பெற்ற அரசு பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு அங்கு இருக்கும் டாஸ்மாக் கடைதான் காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டி டாஸ்மாக் கடையை மூடக் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் வழிப்பறிக் கொள்ளைக்காரனும் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இங்கு இருக்கும் டாஸ்மாக் கடைக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு, இரு தினங்களாக கடைத் திறக்காமல் இருந்த நிலையில், இன்று டாஸ்மாக் கடையை ஊழியர்கள் காவல்துறை உதவியுடன் திறந்தனர்.
இதையடுத்து பட்டினப்பாக்கம் பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்து தீக்குளிக்க முயன்றனர் எனவே, இவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.

0 Responses to சென்னைப் பட்டினப்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள் கைது!